Friday, August 31, 2012

ஏன்?


படிகளில் வேகமாய் ஏறி வந்து
மேல் மூச் கீழ் மூச்சு வாங்குகிறேன் என்கிற பெயரில்
ஏன்  என் உயிரை வாங்குகிறாய்?

Monday, August 27, 2012

ஒரே ஒரு முறை


எப்படி அந்த நோட்டு புத்தகம்
 உன்னை எதுவும் செய்யவில்லையோ
அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன்

ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...

Saturday, August 18, 2012

நியாயமா?

பூங்காவில் அமர்ந்திருந்தோம்..

மரங்கள் பூக்களை தூவியது உன்மேல்.
புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. 
எறும்புகள்கூட உன் மீது விழுந்தே  ஊறி சென்றது..

"ம்.. சும்மா இரு." என்று என் கைகளை மட்டும் 
தட்டி விடுகிறாயே..
நியாயமா?  




எதை வீசி  எனை ஆட்டமிழக்கச் செய்தாய்?     

       

Thursday, August 9, 2012

கோவில் யானை


கொழுப்புதான் இந்த கோவில் யானைக்கு..

எல்லோரையும் ஆசிர்வாதம் செய்துவிட்டு
உன்னைமட்டும் முத்தமிடுகிறது..   

Friday, July 27, 2012

அராஜகம்


ஆயிரம் முத்தங்களை வாங்கிக்கொண்டு
ஒரே ஒரு முத்தத்தை மட்டும் திருப்பி தந்துவிட்டு
 "ம்  அவ்வளவுதான்"  என்று சொல்லி 
அராஜகம் செய்யும் உன்னைபற்றி
 யாரிடம் புகார் செய்வேன்..

நீ நான்



என்னில் நீ ஏற்படுத்திய சுழலில்
என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும்
வினோத நதி நான்..
       
          **************
நிலவு பொழியும் மழை நீ.

Wednesday, July 18, 2012

அழைக்கமாட்டாயா?


வரமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை கொஞ்சி கெஞ்சி என எப்படியெல்லாமோ அழைக்கிறாய்..

அழைக்கமாட்டாயா என காத்துகிடக்கிறேன்
கண்டுகொள்ளமாட்டேன்கிறாயே.. 

வெட்கம்


வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும்
கடித்துக்கொள்கிறாய்?
உனக்கு வலிக்காதா?

வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்..

உனக்கு வலிக்குமெனில் என்னால் 
தா.....ங்கி கொள்ள முடியாது..   

Thursday, July 12, 2012

புரிந்தது


நீ கண்களை மூடி,
கைகூப்பி, முணுமுணுத்து
கும்பிடும்போதுதான் புரிந்தது
சாமி ஏன் சிலையாய் போனதென்று..




Thursday, June 21, 2012

ஐயோ..

முதன்முதலாய் உன்னை சேலையில் பார்த்தேன்..

ஐயோ..
ஏன்  இந்த சேலை இப்படி உன்னை சுற்றி சுற்றி கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறது?

என்னவென்று சொல்ல?


என்னை துளித்துளியாய் பருகுவதும்  நீதான்..
என் மேல் மழையாய் பொழிவதும் நீதான்..
உன்னை என்னவென்று சொல்ல?

அடக்கடவுளே.


கோவிலில் உன்னிடம் தன் பெயரை
அர்ச்சனை செய்ய சொல்லி
அடம் பிடிக்கிறது சாமி..


Friday, June 15, 2012

வன்மையாக கண்டிக்கிறேன்


பார்வையில் அணு ஆயதம்
புன்னகையில் அமில ஆயுதம்
இப்படி என்னுள் நீ நிகழ்த்தும்
படுகொலைகள் ஏராளம்..

இதை கண்டுகொள்ளாத உலக நாடுகளை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!

தேவதை


சிறு வயதில் பள்ளி விழாவில் தேவதை வேடமிட்டாய்..

சரி..

இன்னுமா வேடத்தை கலைக்காமலிருக்கிறாய் ?

மந்திரம்



யாரிடம் கற்றாய்  இந்த முத்த மந்திரத்தை? 

என்னுள்



வானொலி அறிவிப்பாளரின் குரல் போல்
வேகமாய் சென்று விடுகிறாய்.
காதல் தொடர்ந்து என்னுள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது..

வகுப்பறை


வகுப்பறையில் மேசைகளும்
கரும்பலகையும் படிப்பதென்னவோ
உன்னைத்தான்.

Thursday, June 7, 2012

கவிதை


அநேகமாக நடக்க தெரிந்த கவிதை நீயாகத்தான் இருப்பாய்..

இன்னும் எத்தனை கவிதைகளைத்தான் உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய்?

Wednesday, June 6, 2012

பூக்கள்

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..



Monday, June 4, 2012

உதடுகள்


ஒரு சொல் கவிதையின் இரு பகுதிகள்
உன் உதடுகள்..

Wednesday, May 30, 2012

நீ


பூக்களெல்லாம் உன் முத்தங்களே..
                         *******
ரகசியமாய் வந்து போன சாரல் நீ..

Tuesday, May 29, 2012

அடியாள்


மரணத்தின் அடியாள் நீ..

திருவிழா


நீ கோவிலுக்கு வரும்போது,
சாமி தனக்குத்தானே
திருவிழா எடுத்துக்கொள்கிறது..

Monday, May 28, 2012

முத்தம்


இன்னும் இந்த இரவு மிச்சம் வைத்திருக்கிறது
நம் இருவருக்குமான முத்தத்தை..

Saturday, May 26, 2012

கவிதைகள்


வழி நெடுகிலும் கவிதைகள்..
ஒவ்வொன்றிலும் நீ..

நீ


நீ தினமும் கோவிலுக்கு
தேங்காய் பழம் கொண்டு செல்வதால்
ஊரில் தக்காளி, கத்தரி செடிகள் கூட 
தேங்காய் பழம் காய்க்க ஆரம்பித்துவிட்டது..

கண்கள்

குளத்தில் கால் கடிக்கும் மீனாய்
என் இதயம் கடிக்கும் உன் கண்கள்..

Monday, January 30, 2012

தேன்.



தேன் சுரப்பி, உன் உதடுகள்.
உன் உமிழ் நீரிற்காய் சுற்றும் தேனீக்கள்..    

Friday, January 27, 2012

அழகு


பார்.. உன் பார்வையை தக்க வைத்துக்கொள்ள 
உன் அருகில் உள்ள பொருட்களெல்லாம் 
தன்னைத்தானே எவ்வளவு 
அழகு படுத்திக்கொண்டிருக்கின்றன..  

நிலவு


நீ இங்கு இருப்பதால்தான் நிலவு 
பூமியை சுற்றுகிறது..

Tuesday, January 10, 2012

இனிப்பு


நீ சாப்பிடும்போது உணவோடு மிளகாய் வந்துவிட,
"ஆ.. காரம்" என்று அலறினாய்...
மிளகாயோ "ஐ... இனிப்பு" என்று துள்ளியது...
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.