Friday, December 31, 2010

இளைப்பாறிக்கொள்

பயணம் எதுவாக இருந்தாலும்
என்னில் இளைப்பாறிக்கொள்..

Monday, December 6, 2010

பாலைவனம்

இஷ்டம்போல் உன்
காற்று திரியும்
பாலைவனம் நான்..

வேர்

       
என் கண்களின் வேர்கள் நீ..

Tuesday, November 30, 2010

அழகு

வெயிலோ மழையோ
உன்னோடு எல்லாமே அழகுதான்..

கொள்ளைக்காரி

எங்கு சென்றாலும்
என் பார்வைகளையும்
உன்னோடு பிடுங்கிச் சென்று விடுகிறாய்..

Saturday, November 13, 2010

காற்று





நீ எந்த திசைக்கு செல்கிறாயோ
அங்கு மட்டும்தான்
காற்றும் வீசுகிறது..

மந்திர மரம்

எதை கேட்டாலும்
காதலை மட்டும் தரும்
மந்திர மரம் நீ..

Wednesday, October 27, 2010

முத்தம்


உன்னுடன் பரிமாறிக்கொள்ள
 முத்தத்தை தவிர
வேறு எதுவும் என்னிடம் இல்லை..

பார்வை


இன்னும் எத்தனை அகராதியில் தேடுவது
 உன் பார்வையின் அர்த்தத்தை..

Saturday, October 16, 2010

ஆறுதல்


எனக்கு ஆறுதலாய்
நீயிருக்கிறாய் என்பதாலே
நான் கஷ்டங்களை
தேடி தேடி ஏற்றுக்கொள்கிறேன்..

Friday, October 15, 2010

சிற்பம்


உன் பார்வையில்
துண்டாடப்பட்ட
சிற்பம் நான்..

Thursday, October 14, 2010

இரகசியம்


நீ மட்டுமே அறிந்த இரகசியம் நான்..
நான் மட்டுமே அறிந்த இரகசியம் நீ..

வேண்டுதல்


இறைவனிடம் வரம் கேட்பேன்..
நான் தொடுவதெல்லாம் நீயாக வேண்டும்..

Wednesday, October 13, 2010

உனக்கென்ன?


உனக்கென்ன? ஓரப் பார்வையிலும்
 சிறு புன்னகையிலும்
 சென்று விடுகிறாய்
 நானல்லவா அலை தாக்கும்
கரையாகிறேன்..

பயணம்


உன் கை பிடித்து நடக்கும்போது
 சூரியனையும் கடந்து போய் விடுகிறேன்.. 

Tuesday, October 12, 2010

கனவு


என் இரவு தூக்கங்களில்
என் கண்களை கிள்ளி விளையாடும்
கொடுமைக்காரி நீ..

Monday, October 11, 2010

உணவு


நீ எனக்கு தரும்
 உன்னை பற்றிய
 சிறு சிறு பரிமற்றங்கள்தான்
என் கனவு உணவின் பேரிரை..

பார்வை


உன் பார்வையும் என் பார்வையும்
சங்கமிக்கும் பொழுது
கடல் மூழ்கிவிடுகிறது..

நீயும் காதலும்



நான் என்ன எழுதினாலும்
 நீயும் காதலும்
 அதில் எங்கேனும் 
வந்துவிடுகிறீர்கள்..

Friday, October 8, 2010

எனக்குள் நீ


மேகங்களினூடான மழைத்துளிபோல்
நீ எனக்குள்..
நீ என்னை விட்டு பிரிகையில்
நானும் மறைந்து போகிறேன்..

Tuesday, October 5, 2010

நெருப்பு



















எப்படியும் எனக்குள்
நெருப்பை பற்ற வைத்து விடுகிறாய்
நீ அடுத்தவனுடன்
பேசும்போது..

Friday, October 1, 2010

நீ


எதுவுமே இல்லாத வெறுமையாய்
தோன்றும்போது  நீ வந்து
என் மனசுக்குள்
சாய்ந்து கொள்கிறாய்

Wednesday, September 29, 2010

காலந்தின்னி

 
என் நேரங்களை மொத்தமாய்
உன் நினைவுகளே
தின்று விடுகிறது..

Monday, September 27, 2010

புன்னகை

எந்த ஒரு வார்த்தையும்
தராத ஆறுதலை
உன் சிறு புன்னகையில்
பெறுகிறேன்.. 

வெட்கம்


அடிப்பாவி..!!
உன் வெட்கத்தையெல்லாம்
இப்படி என் மீது
கொட்டிவிட்டாயே..
 

Saturday, September 25, 2010

பார்வை

தட்டுத்தடுமாறி  எழுந்தாலும்
மீண்டும் உன் பார்வையில்
தடுக்கி விழுந்து விடுகிறேன்..

Friday, September 24, 2010

முத்தம்


முத்தங்களை தவிர வேறு 
என்ன உன்னை அழகாக்கும் ?

ஆசை



மழைக்கும் கூட
உன்னை கட்டிபிடித்துக்
கொள்ள  ஆசை..

Thursday, September 23, 2010

அழகு

அழகாய் இருக்கிறாய் என்பதற்காக மட்டுமல்ல
அழகாகவும் இருக்கிறாய் என்பதற்காக உன்னை காதலிக்கிறேன்..

Monday, September 20, 2010

காற்று


உன்னை சுவாசித்தே
உயிர் வாழ்ந்து விடும்
இந்த காற்று..

Saturday, September 18, 2010

முத்தம்

 couple_kissing_mask.jpg image by luvmy4sons_bucket
எனக்கு பிரிவு என்பது
மிகவும் வேதனையை தரும்..
தயவு செய்து
நம் உதடுகளை
பிரித்துவிடதே..

Thursday, September 16, 2010

காதல்.


நமக்காக இத்தனை
காலம் வாழ்ந்தது காதல்..
இனி நம்மால்
வாழப்போகிறது இந்த காதல்..

இனிமை


ஒவ்வொரு முறை
உன் பெயரை உச்சரிக்கும் போது
என் பேச்சு இனிமையடைகிறது..

Wednesday, September 15, 2010

இரை


ஒரு குருவியைபோல்
காத்திருக்கிறேன்
உன் பார்வை
இரையை தின்பதற்கு..

Saturday, September 11, 2010

மகிழ்ச்சி

நீ வெற்றிபெற்றால்
எவ்வளவு மகிழ்ச்சியோ
அதைவிட மகிழ்ச்சி
நான் உன்னிடம்
தோற்கும்போது..

Friday, September 10, 2010

திசைமானி


















என் திசைமானி
நீயிருக்கும் இடத்தை
மட்டுமே காட்டுகிறது..

Thursday, September 9, 2010

உன் பேச்சு

எங்கே கற்றுக்கொண்டாய்
வார்த்தைகளால் ஓவியம் வரைய..

முத்தம்

சத்தம் வராமல்
முத்தம் தர சொல்கிறாய்..
உனக்கு தந்துவிட்ட
சந்தோஷத்தில் முத்தம்தான்
சத்தமிடுகிறது..

Saturday, September 4, 2010

வாசம்

உன் சுவாசம் பெற்றே
மனம் வீசுகிறது பூக்கள்..

Thursday, September 2, 2010

அழகு

உன்னுடன் நிற்கும்போது
என் நிழலும்
அழகாய்த் தெரிகிறது..
எப்படி உடை அணிந்து சென்றாலும்
உன்னுடன் செல்வதுபோல் அழகில்லை..

பார்வை

தயவு செய்து சூரியனை கண்கூசச் செய்யாதே ..

பூவும் புன்னகையும்

பூக்களை பறித்துக்கொண்டு
புன்னகைகையை விட்டுச் செல்கிறாய்..

மணித்துளி

என் ஒவ்வொரு வினாடியும்
உன்னை நோக்கியே
நகர்கிறது..

அருவி

எங்கெங்கோ இருந்து
ஓடி வந்து விழுகிறது அருவி
எந்த ஒரு சிறு காயமுமின்றி
எப்படியோ அதன் வழியில் சென்று விடுகிறது..

வலி

இலையினை கடிக்கும்
புழுவாய் நான்..
செடியின் வலி புரிகிறது,
குருவியால் நான்
கொத்தப்படும்பொழுது..

புன்னகை

தெரிந்தும் தெரியாமலும்
மறந்துபோன புன்னகையை
திருப்பித்தருகிறது
குழந்தையின் சிரிப்பு..

Wednesday, September 1, 2010

விளையாட்டு

எங்கெங்கோ ஓடி
ஒளிந்து கொள்ளப் பார்க்கிறேன்
ஆனால் எப்படியும் என்னை பிடித்து
உனக்குள் ஒளித்துக்கொள்கிறாய்..

அழகாக்கு


யாரோ களைத்துப் போட்ட புத்தகங்களையெல்லாம்
அழகாய் அடுக்கிவைக்கிறாய்
நீ கலைத்துப்போட்ட
என் மனதை மட்டும்
கன்டுகொள்ள மாட்டேன்கிறாய்..

Tuesday, August 31, 2010

பூங்கொத்து

பூங்கொத்தை பார்த்து
அதிசியிக்கிறாய் நீ ..
உன் முகத்தில்
மலரும் பூக்களை பார்த்து
அதிசியிக்கிறேன் நான்..

வறட்சி











நிர்வாணமாய் மரம்
வெறித்துப் பார்க்கிறது
வானம்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.