Saturday, April 30, 2011

வலி

உனக்காய்  காத்திருக்கையில்
மலர்களும் காயப்படுத்துகிறது.. 

ஸ்வரம்

உன் ஸ்வரமாகிபோகின்றன 
என் விரல்கள்.. 

Tuesday, April 12, 2011

பசி


உன் உதடு ஊட்டிய 
ஒற்றை பருக்கையில்
என் மனசு பசி ஆறிப்போகும் ..

இயந்திரம்


என் மனசை கசக்கி 
காதல் பிழியும் 
இயந்திரம் நீ..

வெட்கம்


உன் வெட்கம்தான் முழுசாய் என் மனசை
கட்டிப் பிடித்துக்
கொண்டிருக்கிறது..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.