Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, November 20, 2015

முத்தம்


மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்..
சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்..
சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்..
கை தவறி உடைந்த தேநீர்க் கோப்பையாய் சிதறி போனது முத்தம்..

Sunday, April 12, 2015

முத்தம்

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமாகவே  கொடுத்துவிட்டேன். இப்போது அசலைகூட திரும்ப பெற முடியாமல் தவிக்கிறேன் # முத்தம்

Friday, April 3, 2015

கவன ஈர்ப்பு

உனக்கான கவன ஈர்ப்பு போராட்டத்தில் தொலைந்து போனேன் நான்..

அழகு

ஒப்பனையற்ற அழகு உனது புன்னகை..

Friday, December 12, 2014

"ம்"


"ம்" என்று இதழ் பிரியாமல் பதிலளிக்கிறாய். உன் இதழ்  தொட்டு வராத சொற்கள் கூட இனிமையாயில்லை...

எட்டாவது வண்ணம்


தினமும் வானவில்லுடன் வருகிறாய், புன்னகையில் பிரித்து வெட்கத்தில் குழைத்து எட்டாவது வண்ணம் பூசி செல்கிறாய் என்மீது.

Tuesday, September 17, 2013

எதுகை மோனை


எதுகை மோனை சரியில்லையெனினும் அழகுதான்
உன் தெத்துப்பல்.

Saturday, June 29, 2013

பாட்டி சொல்லாத கதை.


தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்
என சொல்லி கொடுத்த பாட்டி
காதலித்தால், தேவதை
மனசை குத்தும் என சொல்லிகொடுக்கவில்லை.


சாப்பிட்டியா?


எப்படி பசிப்பது அலுத்துப் போகவில்லையோ
அதுபோல்தான் "சாப்பிட்டியா?"  என
 தினமும் நீ கேட்பதும் அலுத்துப்போவதில்லை.. 

Wednesday, May 8, 2013

வேண்டுதல்



உன் வேண்டுதல்களில்
நான் யாகமாகிறேன்.

Tuesday, March 26, 2013

நீ



காற்றையும் உருக்கத் தெரிந்தவள்
நீயாகத்தான் இருப்பாய்.
     
            *****

என் ஈற்றடி
உன் இதழடி.

Saturday, August 18, 2012

நியாயமா?

பூங்காவில் அமர்ந்திருந்தோம்..

மரங்கள் பூக்களை தூவியது உன்மேல்.
புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. 
எறும்புகள்கூட உன் மீது விழுந்தே  ஊறி சென்றது..

"ம்.. சும்மா இரு." என்று என் கைகளை மட்டும் 
தட்டி விடுகிறாயே..
நியாயமா?  




எதை வீசி  எனை ஆட்டமிழக்கச் செய்தாய்?     

       

Friday, July 27, 2012

நீ நான்



என்னில் நீ ஏற்படுத்திய சுழலில்
என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும்
வினோத நதி நான்..
       
          **************
நிலவு பொழியும் மழை நீ.

Wednesday, June 6, 2012

பூக்கள்

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..



Tuesday, May 29, 2012

அடியாள்


மரணத்தின் அடியாள் நீ..

திருவிழா


நீ கோவிலுக்கு வரும்போது,
சாமி தனக்குத்தானே
திருவிழா எடுத்துக்கொள்கிறது..

Monday, May 28, 2012

முத்தம்


இன்னும் இந்த இரவு மிச்சம் வைத்திருக்கிறது
நம் இருவருக்குமான முத்தத்தை..

Saturday, May 26, 2012

கவிதைகள்


வழி நெடுகிலும் கவிதைகள்..
ஒவ்வொன்றிலும் நீ..

நீ


நீ தினமும் கோவிலுக்கு
தேங்காய் பழம் கொண்டு செல்வதால்
ஊரில் தக்காளி, கத்தரி செடிகள் கூட 
தேங்காய் பழம் காய்க்க ஆரம்பித்துவிட்டது..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.