Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, April 3, 2015

கவன ஈர்ப்பு

உனக்கான கவன ஈர்ப்பு போராட்டத்தில் தொலைந்து போனேன் நான்..

அழகு

ஒப்பனையற்ற அழகு உனது புன்னகை..

சிறை


உன்னைச்சுற்றி வட்டமிட்டு நான் சிறைபடுகிறேன் 

Tuesday, December 16, 2014

பொறுக்கி


தீண்டினால், "ச்சீ ... போடா பொறுக்கி" என்று  தள்ளி விடுகிறாய்.
சரி என்று  பேசாமல் தள்ளி நின்றாலும் முறைக்கிறாய். . 

Friday, December 12, 2014

"ம்"


"ம்" என்று இதழ் பிரியாமல் பதிலளிக்கிறாய். உன் இதழ்  தொட்டு வராத சொற்கள் கூட இனிமையாயில்லை...

எட்டாவது வண்ணம்


தினமும் வானவில்லுடன் வருகிறாய், புன்னகையில் பிரித்து வெட்கத்தில் குழைத்து எட்டாவது வண்ணம் பூசி செல்கிறாய் என்மீது.

Thursday, December 11, 2014

முத்தம்
















 உன் முத்தாக்க முகாமிற்கு
கொண்டுவரப்பட்டவன் நான்.    

Tuesday, September 17, 2013

எதுகை மோனை


எதுகை மோனை சரியில்லையெனினும் அழகுதான்
உன் தெத்துப்பல்.

Saturday, June 29, 2013

பாட்டி சொல்லாத கதை.


தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்
என சொல்லி கொடுத்த பாட்டி
காதலித்தால், தேவதை
மனசை குத்தும் என சொல்லிகொடுக்கவில்லை.


சாப்பிட்டியா?


எப்படி பசிப்பது அலுத்துப் போகவில்லையோ
அதுபோல்தான் "சாப்பிட்டியா?"  என
 தினமும் நீ கேட்பதும் அலுத்துப்போவதில்லை.. 

Sunday, May 12, 2013

நீ - நான்


உன் பெருவெளியின் சிறுதுளி நான்
என் சிறுதுளியின் பெருவெளி நீ 

Wednesday, May 8, 2013

நீ


கதவை உடைத்து உள்ளே வந்து  களவாடுபவனைக் கேள்விபட்டிருக்கிறேன்.
மொத்தமாய் களவாடிவிட்டு பின்னர் உள்ளே வந்து என்னை
கன்னா  பின்னாவென்று உடைக்கிறாயே
உன்னை யாரென்று சொல்ல?










உலகம் பெரிதுதான்.
இன்னும் என்னால்
உன்னை கடக்க முடியவில்லை. 

வேண்டுதல்



உன் வேண்டுதல்களில்
நான் யாகமாகிறேன்.

Friday, May 3, 2013

முத்தம்.


உன்னுடனான  சண்டைகளில்
நான் வெல்லும்  பரிசுகள்
கடி,
கிள்ளல்,
நகக்கீறல்
இறுதியாய் நிச்சய பரிசாக முத்தம். 

பிரிவு


ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை
எனை சுட்டுக்கொண்டேயிருக்கும்
முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது
"டேய்... போகனுமா?" என்று 
நீ என்மேல் சிந்திய கண்ணீர்த்துளி...

Tuesday, March 26, 2013

நீ



காற்றையும் உருக்கத் தெரிந்தவள்
நீயாகத்தான் இருப்பாய்.
     
            *****

என் ஈற்றடி
உன் இதழடி.

Friday, February 15, 2013

முத்தம்


மூச்சிரைக்கும் நம் பேருரையின்
கடைசி புள்ளியாய்
இந்த முத்தம்... 

Tuesday, February 5, 2013

பூ



இதுவரை பூத்த பூக்களையும்
இனிமேல் பூக்க போகும் பூக்களையும்
ஒன்றாய் சேர்த்தால்கூட உன் போல் வராது..

Monday, January 21, 2013

பொறாமை


எப்படியெல்லாம் அந்த குழந்தையை கொஞ்சுகிறாய்
என்னை கிள்ளியாவது வையேன்... 

Friday, January 18, 2013

மறுபிறவி


"உன்னை கொல்ல போறேன் பாரு"
என்று என்னை கிள்ளி கிள்ளி 
சண்டையிட்டு உயிர்பிக்கிறாய்..

முத்தங்களால் சாகடித்து
 ஸ்பரிசங்களால் உயிர்பிக்கிறாய்..

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.