கதவை உடைத்து உள்ளே வந்து களவாடுபவனைக் கேள்விபட்டிருக்கிறேன்.
மொத்தமாய் களவாடிவிட்டு பின்னர் உள்ளே வந்து என்னை
கன்னா பின்னாவென்று உடைக்கிறாயே
உன்னை யாரென்று சொல்ல?
உலகம் பெரிதுதான்.
இன்னும் என்னால்
உன்னை கடக்க முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை
எனை சுட்டுக்கொண்டேயிருக்கும்
முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது
"டேய்... போகனுமா?" என்று
நீ என்மேல் சிந்திய கண்ணீர்த்துளி...