skip to main
|
skip to sidebar
!♥♥ கோவி♥♥!
காதலும் இன்ன பிறவும்..
Wednesday, September 29, 2010
காலந்தின்னி
என் நேரங்களை மொத்தமாய்
உன் நினைவுகளே
தின்று விடுகிறது..
Monday, September 27, 2010
புன்னகை
எந்த ஒரு வார்த்தையும்
தராத ஆறுதலை
உன் சிறு புன்னகையில்
பெறுகிறேன்..
வெட்கம்
அடிப்பாவி..!!
உன் வெட்கத்தையெல்லாம்
இப்படி என் மீது
கொட்டிவிட்டாயே..
Saturday, September 25, 2010
பார்வை
தட்டுத்தடுமாறி எழுந்தாலும்
மீண்டும் உன் பார்வையில்
தடுக்கி விழுந்து விடுகிறேன்..
Friday, September 24, 2010
முத்தம்
முத்தங்களை தவிர வேறு
என்ன உன்னை அழகாக்கும் ?
ஆசை
மழைக்கும் கூட
உன்னை கட்டிபிடித்துக்
கொள்ள ஆசை..
Thursday, September 23, 2010
அழகு
அழகாய் இருக்கிறாய் என்பதற்காக மட்டுமல்ல
அழகாகவும் இருக்கிறாய் என்பதற்காக உன்னை காதலிக்கிறேன்..
Monday, September 20, 2010
காற்று
உன்னை சுவாசித்தே
உயிர் வாழ்ந்து விடும்
இந்த காற்று..
Saturday, September 18, 2010
முத்தம்
எனக்கு பிரிவு என்பது
மிகவும் வேதனையை தரும்..
தயவு செய்து
நம் உதடுகளை
பிரித்துவிடதே..
Thursday, September 16, 2010
காதல்.
நமக்காக இத்தனை
காலம் வாழ்ந்தது காதல்..
இனி நம்மால்
வாழப்போகிறது இந்த காதல்..
இனிமை
ஒவ்வொரு முறை
உன் பெயரை உச்சரிக்கும் போது
என் பேச்சு இனிமையடைகிறது..
Wednesday, September 15, 2010
இரை
ஒரு குருவியைபோல்
காத்திருக்கிறேன்
உன் பார்வை
இரையை தின்பதற்கு..
Saturday, September 11, 2010
மகிழ்ச்சி
நீ வெற்றிபெற்றால்
எவ்வளவு மகிழ்ச்சியோ
அதைவிட மகிழ்ச்சி
நான் உன்னிடம்
தோற்கும்போது..
Friday, September 10, 2010
திசைமானி
என் திசைமானி
நீயிருக்கும் இடத்தை
மட்டுமே காட்டுகிறது..
Thursday, September 9, 2010
உன் பேச்சு
எங்கே கற்றுக்கொண்டாய்
வார்த்தைகளால் ஓவியம் வரைய..
முத்தம்
சத்தம் வராமல்
முத்தம் தர சொல்கிறாய்..
உனக்கு தந்துவிட்ட
சந்தோஷத்தில் முத்தம்தான்
சத்தமிடுகிறது..
Saturday, September 4, 2010
வாசம்
உன் சுவாசம் பெற்றே
மனம் வீசுகிறது பூக்கள்..
Thursday, September 2, 2010
அழகு
உன்னுடன் நிற்கும்போது
என் நிழலும்
அழகாய்த் தெரிகிறது..
எப்படி உடை அணிந்து சென்றாலும்
உன்னுடன் செல்வதுபோல் அழகில்லை..
பார்வை
தயவு செய்து சூரியனை கண்கூசச் செய்யாதே ..
பூவும் புன்னகையும்
பூக்களை பறித்துக்கொண்டு
புன்னகைகையை விட்டுச் செல்கிறாய்..
மணித்துளி
என் ஒவ்வொரு வினாடியும்
உன்னை நோக்கியே
நகர்கிறது..
அருவி
எங்கெங்கோ இருந்து
ஓடி வந்து விழுகிறது அருவி
எந்த ஒரு சிறு காயமுமின்றி
எப்படியோ அதன் வழியில் சென்று விடுகிறது..
வலி
இலையினை கடிக்கும்
புழுவாய் நான்..
செடியின் வலி புரிகிறது,
குருவியால் நான்
கொத்தப்படும்பொழுது..
புன்னகை
தெரிந்தும் தெரியாமலும்
மறந்துபோன புன்னகையை
திருப்பித்தருகிறது
குழந்தையின் சிரிப்பு..
Wednesday, September 1, 2010
விளையாட்டு
எங்கெங்கோ ஓடி
ஒளிந்து கொள்ளப் பார்க்கிறேன்
ஆனால் எப்படியும் என்னை பிடித்து
உனக்குள் ஒளித்துக்கொள்கிறாய்..
அழகாக்கு
யாரோ களைத்துப் போட்ட புத்தகங்களையெல்லாம்
அழகாய் அடுக்கிவைக்கிறாய்
நீ கலைத்துப்போட்ட
என் மனதை மட்டும்
கன்டுகொள்ள மாட்டேன்கிறாய்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
என்னைப்பற்றி
கோவி
தொடர்பிற்கு: +919894808794 govivp@yahoo.com
View my complete profile
இதுவரை
►
2015
(5)
►
November
(1)
►
April
(4)
►
2014
(4)
►
December
(4)
►
2013
(20)
►
September
(1)
►
June
(2)
►
May
(5)
►
March
(1)
►
February
(2)
►
January
(9)
►
2012
(31)
►
August
(4)
►
July
(5)
►
June
(11)
►
May
(7)
►
January
(4)
►
2011
(102)
►
December
(16)
►
November
(17)
►
October
(2)
►
September
(2)
►
August
(5)
►
July
(6)
►
June
(9)
►
May
(18)
►
April
(5)
►
March
(7)
►
February
(11)
►
January
(4)
▼
2010
(54)
►
December
(3)
►
November
(4)
►
October
(15)
▼
September
(26)
காலந்தின்னி
புன்னகை
வெட்கம்
பார்வை
முத்தம்
ஆசை
அழகு
காற்று
முத்தம்
காதல்.
இனிமை
இரை
மகிழ்ச்சி
திசைமானி
உன் பேச்சு
முத்தம்
வாசம்
அழகு
பார்வை
பூவும் புன்னகையும்
மணித்துளி
அருவி
வலி
புன்னகை
விளையாட்டு
அழகாக்கு
►
August
(6)
அதிகம் வாசிக்கப்பட்டவை
புரிந்தது
நீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..
ம்ம்ம்....
நீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..
வெட்கம்
வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய்? உனக்கு வலிக்காதா? வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...
ஒரே ஒரு முறை
எப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...
நியாயமா?
பூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...
ஏதாவது?
உன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..
நீ நான்
என்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...
பூக்கள்
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
பிசாசு
என் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..
பிரிவு
ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது "டேய்... போகனுமா?" என்று நீ...
இணைப்பு நிரலிகள்
தமிழ் நண்பர்கள்
!♥♥ கோவி♥♥!
© 2013.