Monday, February 28, 2011

பார்வை


உன் ஒரு கனப்பார்வையில்
 என் உலகை 
அளந்து விடுகிறாய்..

Thursday, February 24, 2011

மூச்சுக்காற்று


உன் காதோரம் பேசும்போதுதான்
என் மூச்சுக்காற்றும் 
மொழியாகிறது..

Monday, February 14, 2011

நான்


உன்னால் புனரமைக்கப்பட்டவன் நான்..

கண்கள்


உன் மனசு பதறிய வார்த்தைகளைத்தான்
கண்கள் பேசுகிறது..

Thursday, February 10, 2011

என் கோபம்


உன் தவறுகளில் நீ உதடு சுழிக்கும் போது
  கோபம்  சந்தோசப்பட்டுக்கொள்கிறது 

கலங்கரை விளக்கம்


உன்னால் தாக்கி அழிக்கப்பட்ட
கலங்கரை விளக்கம் நான்..
திரும்ப திரும்ப நீ தாக்க மட்டுமே
பயன்படுகிறேன்..

Saturday, February 5, 2011

காற்று


உன்னை காணவே மூச்சிரைக்க ஓடி வருகிறது காற்று..

பூக்கள்


உன் மீது மட்டும்தான் பூக்கள் காதலை வீசுகிறது..

நீ மட்டும்தான்


நீ மட்டும்தான் மனசுக்குள்
கிச்சுகிச்சு மூட்டி
காதலை வரவைக்கிறாய்..

Thursday, February 3, 2011

நாமகிப்போனோம்


நாமகிப்போன பொழுதுகளில் உலகம் தொலைந்து விடுகிறது..

காற்று



உன்னிடம் மட்டுமே சிலிர்த்துக்கொள்கிறது காற்று..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.