Friday, June 24, 2011

அழகிய தாக்குதல்காரி


உன் கண்களால் மிரட்டி உயிரை பறிக்கும்
அழகிய தாக்குதல்காரி நீ.. 

Tuesday, June 14, 2011

குறும்பு


பேசாமலிரு என்று சொல்லி 
கையை தட்டி விட்டாலும் உனக்கு தெரியாதா?
என் கைகள் செய்யும் குறும்பை விட 
உன் கண்கள் செய்யும் குறும்பு அதிகமென்று..

கிள்ளல்


உன் முத்தத்தை காட்டிலும் 
உன் கிள்ளலில் சுகம் அதிகம்.. 

மனசு


நீ கிள்ளுவாய் என்பதற்காகவே 
தவறு செய்யசொல்கிறது மனசு.. 

Thursday, June 9, 2011

தடைகள்.

எவ்வளவு அழகானவை 
என் பாதையில்
 நீ ஏற்படுத்தியிருக்கும் 
தடைகள்..

கொஞ்சம் பூக்கள் 
கொஞ்சம் தூறல்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் மேகம்
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் புன்னகை
நிறைய காதல்..

ஒவ்வொன்றிலும் மோதி 
உனக்குள்ளேயே விழுகிறேன்..

பெயர்


மொழிகள் கற்றுக்கொண்டன
உன் பெயரை.. 

Wednesday, June 8, 2011

காத்திருப்பு


உனக்கான காத்திருப்புகளில்
 மரம் என் மீது உதிர்கிறது காதலை..

மரம்

உன் வெட்கத்திற்கு நாணம் கொள்கிறது 
நம் சந்திப்பிற்கு நிழல் தரும் மரம்.

சுவடு


உன் சுவடுகளில் மூழ்கி விடுகிறது கடல்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.