Thursday, September 2, 2010

வலி

இலையினை கடிக்கும்
புழுவாய் நான்..
செடியின் வலி புரிகிறது,
குருவியால் நான்
கொத்தப்படும்பொழுது..

புன்னகை

தெரிந்தும் தெரியாமலும்
மறந்துபோன புன்னகையை
திருப்பித்தருகிறது
குழந்தையின் சிரிப்பு..

Wednesday, September 1, 2010

விளையாட்டு

எங்கெங்கோ ஓடி
ஒளிந்து கொள்ளப் பார்க்கிறேன்
ஆனால் எப்படியும் என்னை பிடித்து
உனக்குள் ஒளித்துக்கொள்கிறாய்..

அழகாக்கு


யாரோ களைத்துப் போட்ட புத்தகங்களையெல்லாம்
அழகாய் அடுக்கிவைக்கிறாய்
நீ கலைத்துப்போட்ட
என் மனதை மட்டும்
கன்டுகொள்ள மாட்டேன்கிறாய்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.