Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts

Friday, November 20, 2015

முத்தம்


மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்..
சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்..
சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்..
கை தவறி உடைந்த தேநீர்க் கோப்பையாய் சிதறி போனது முத்தம்..

Tuesday, December 16, 2014

பொறுக்கி


தீண்டினால், "ச்சீ ... போடா பொறுக்கி" என்று  தள்ளி விடுகிறாய்.
சரி என்று  பேசாமல் தள்ளி நின்றாலும் முறைக்கிறாய். . 

Thursday, June 21, 2012

அடக்கடவுளே.


கோவிலில் உன்னிடம் தன் பெயரை
அர்ச்சனை செய்ய சொல்லி
அடம் பிடிக்கிறது சாமி..


Friday, June 15, 2012

வன்மையாக கண்டிக்கிறேன்


பார்வையில் அணு ஆயதம்
புன்னகையில் அமில ஆயுதம்
இப்படி என்னுள் நீ நிகழ்த்தும்
படுகொலைகள் ஏராளம்..

இதை கண்டுகொள்ளாத உலக நாடுகளை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!

என்னுள்



வானொலி அறிவிப்பாளரின் குரல் போல்
வேகமாய் சென்று விடுகிறாய்.
காதல் தொடர்ந்து என்னுள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது..

Wednesday, June 6, 2012

பூக்கள்

பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..



Wednesday, May 30, 2012

நீ


பூக்களெல்லாம் உன் முத்தங்களே..
                         *******
ரகசியமாய் வந்து போன சாரல் நீ..

Tuesday, May 29, 2012

அடியாள்


மரணத்தின் அடியாள் நீ..

திருவிழா


நீ கோவிலுக்கு வரும்போது,
சாமி தனக்குத்தானே
திருவிழா எடுத்துக்கொள்கிறது..

Monday, May 28, 2012

முத்தம்


இன்னும் இந்த இரவு மிச்சம் வைத்திருக்கிறது
நம் இருவருக்குமான முத்தத்தை..

Saturday, May 26, 2012

கவிதைகள்


வழி நெடுகிலும் கவிதைகள்..
ஒவ்வொன்றிலும் நீ..

Monday, January 30, 2012

தேன்.



தேன் சுரப்பி, உன் உதடுகள்.
உன் உமிழ் நீரிற்காய் சுற்றும் தேனீக்கள்..    
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.