skip to main
|
skip to sidebar
!♥♥ கோவி♥♥!
காதலும் இன்ன பிறவும்..
Monday, December 26, 2011
காற்று
நீ துணி உலர்த்துவதை பார்த்து
காற்றும் உன் கைக்குள் அகப்பட்டுக்கொள்கிறது,
தன்னையும் குளிப்பாட்ட சொல்லி..
காதல்
ஆணுக்கு வெட்கத்தையும்
பெண்ணுக்கு மீசையையும் தந்து விடுகிறது காதல்..
முத்தப்பூச்சி
உன் பூவிதழை மொய்த்து தின்னும்
முத்தப்பூச்சி நான்..
Wednesday, December 14, 2011
பூக்களுக்கு அழகு குறிப்பு
தோட்டத்து பூக்களெல்லாம்
அழகு குறிப்பு கேட்கிறது..
உன்னிடம்..
மிளகாய் கவிதை
நீ குளித்த நீர் போவதால்தான்
உன் வீட்டு மிளகாய் செடியும்
இனிப்பாய் காய்க்கிறது..
தித்திப்பு.
தித்திப்பிற்காய் எதற்கு இவ்வளவு சர்க்கரை?
பலகாரத்திற்கு உன் பெயர் வைத்தாலே போதுமே!
வெட்கம்
நீ வெட்கம் தாளாமல்
முகம் பொத்திக்கொண்டதால்
வந்ததுதான் இந்த சந்திரகிரகணமோ?
கண்ணாடி.
தினமும் நீ முகம் பார்க்கும்போது
கண்ணாடி தன்னை அழகாக்கிகொள்கிறது..
Tuesday, December 13, 2011
நியாயமா?
உன் கூந்தலில் மயங்கிக்கிடக்கும் சீப்பை
கூந்தலில் மாட்டிக்கொண்டதாய் திட்டுகிறாயே?
என்னாச்சு?
என்னாகி போனதெனக்கு?
குழவி ரீங்காரம் பாடினால் கூட
உன் பெயராகவே கேட்கிறது..
வெட்கம்
ஏன் இப்படி வெட்கப்பட்டு சிவந்து கொள்கிறாய்?
எனக்கு சிவப்பு ரோஜா கூட கருப்பாய் தெரிகிறது.
காதல்
உன் விரல் பிடித்து
நடக்க கற்றுக்கொண்டிருகிறது
காதல்..
வண்ணம்
வண்ணம் போதவில்லையென்றால்
இந்த பூக்கள் எல்லாம்
இப்படியா உன் மீது உரசிக்கொள்வது..
காதல்
எப்பொழுதும் அடம்பிடிக்கும் என்னை,
உன்னிடம் கெஞ்ச விட்டுவிட்டது காதல்..
ஏன்?
எது வேண்டும் என்றாலும்
கேட்டு பெரும் நீ
மனசை மட்டும் ஏன்
பிடுங்கிச் சென்றாய்.
விழிகள்
கன்னாபின்னாவென்று
என் மனசை கடித்து வைக்கும்
உன் விழிகளிடம் சொல்லி வை..
இல்லையென்றால்
மீன் கொத்திகளிடம் அவற்றை
பிடித்துக்கொடுத்து விடுவேன்..
Tuesday, November 22, 2011
ஏன்?
உன்னோடு சண்டையிட்டு, பிறகு
சமாதனம் சொல்லி கட்டி அழும்போது
இருக்கும் இன்பம்,
உன்னோடு சிரித்துப்
பேசும்போது கூட
இருப்பதில்லையே ஏன்?
பெருமூச்சு
எதை பார்த்து இப்படி உனக்கு பெருமூச்சு?
சன்னலுக்கு வியர்த்துவிட்டது.!!
சுகம்
உன் பெருமூச்சில் காற்று உணர்ந்திருக்கும்
தென்றலின் சுகத்தை.
Monday, November 21, 2011
அவசியமற்றுப்போனது
புத்தக பரிசளிப்பில் அன்புடன் என்று எழுதி
உன் பெயரையும் எழுதி தந்து சென்றாய்..
உன் பெயர் தவிர
மற்றவை சுவார(அவ)சியமற்றுப்போனது..
நீ
சூரியனை சுற்றியதை காட்டிலும்
பூமி உன்னையே
அதிகம் சுற்றியிருக்கும்.
ஏதாவது?
உன்
சிரிப்போ, சாபமோ, கோபமோ
ஏதாவதொன்றில்
ஏதுமற்றதும்
எதவதாகிவிடுகிறது..
என்னைபோலவே..
கோலங்கள்
புற்கள் மீது நீ போட்ட கோலங்கள்
பூக்களாய் பூத்திருகிறது..
ஈரம்
நீ குளித்தபின் காற்றிடம்
கெஞ்சிகொண்டிருக்கிறது கூந்தலின் ஈரம்
உலர்த்தி விடாதே என்று..
என்னவென்று சொல்வது?
உயிரைக் கொன்று சதை தின்பதை
மாமிசபட்சினி என்றால்,
உயிரை தின்னும் உன்னை
என்னவென்று சொல்வது?
நீ...
சபிக்கபட்ட காதலிடம் இருந்து மோட்சம் கொடுத்தாய் நீ...
நீரூற்று உன் பெயரூற்றி போகிறது...
புள்ளியாக்கபட்ட என் பிம்பத்தின் இறுதி நீ...
சாரல்
மேகம் கொஞ்சிபோனது
உன்னை,
சாரலால்.
பார்வை.
இனிக்க இனிக்க
மிளகாய் தருகிறது
உன் பார்வை.
Thursday, November 17, 2011
மழை
மேகம் அட்சதை தூவி நடத்துகிறது
நம் திருமணத்தை..
Wednesday, November 2, 2011
துளி
மழையின்
ஒவ்வொரு துளியும்
உன்னை பருகவே விழுகிறது..
உனக்காய் நான்
உனக்காய்
படைக்கப்பட்டவைகளில்
முதலாமவன் நான்..
Tuesday, November 1, 2011
வெகுளி
நான் தெரிந்தே உன்மேல் மோத..
நீ தெரியாமல் மோத..
வெகுளியாய் விழித்துக்கொண்டது
காதல், உன் முகத்தில்..
கட்டிகொள்
கட்டிகொள்..
மழை, மேகங்களை
நனைக்காமல் இருக்கட்டும்..
Friday, October 7, 2011
நீ
என் உறக்கத்தின் விழிப்பு நீ..
என் விழிப்பின் உறக்கம் நீ..
காதலாகிப்போனோம்
நாமாக நாம் இல்லாமல் போனபோது,
காதலாகிப்போனோம்..
Saturday, September 24, 2011
விழிப்பு
தோளில்
சாய்ந்து உறங்கி
என் கனவுகளில்
விழிக்கிறாய்..
Monday, September 5, 2011
மொழி
இலக்கணம் மீறும்போதுதான்
நம் ஸ்பரிசம் மொழியாகிறது..
Wednesday, August 24, 2011
சுனாமி
அலைகள் உன்னைத் தாக்கும்போது
எனக்குள் வந்த சுனாமிகளை அறிவாயா?
ஏய் பார்த்து..
ஏய் பார்த்து..
பூக்கள் உன்னை கசக்கிவிடபோகிறது..
ஆசை
உன் நிறம்போல மாற
பூக்கள் ஆசைப்படுகின்றன..
Tuesday, August 23, 2011
மனசு
ஏதேதோ செய்தவரையெல்லாம்
மறந்துவிடும் மனசு,
ஏதும் செய்யாத உன்னை மட்டும்
நினைத்துக்கொண்டே இருக்கிறது..
முத்தம்
உன் வெட்கம் வரையும் தூரிகை
என் முத்தம்..
Thursday, July 28, 2011
பறவை
உன் முத்தக்காட்டில் திரியும்
பறவை நான்..
உன் இதழ்களில் இளைப்பாற
அமர்கிறேன்..
Wednesday, July 27, 2011
பைத்தியம்
நீ முத்த பைத்தியம்..
நான் உன் மொத்த பைத்தியம்..
Friday, July 22, 2011
ஓ..
நம் ஸ்பரிசங்களில் இருந்து
விடை பெற தெரியாதது
என் உதடும் உன் வெட்கமும்..
Thursday, July 21, 2011
தாகம்
மௌன தாகம்,
தீர்த்துக்கொள்கிறாய்
என் மணித்"துளி"களில்..
Wednesday, July 20, 2011
தோல்வி
என்னுடன் போட்டியிடாமலேயே
என்னை தோற்கடித்து விடுகிறாய்..
Friday, July 15, 2011
நதி
உன்னிலிருந்து உன்மேல் பெய்து,
உன்னில் வழிந்தோடி,உனக்குள்ளேயே
சங்கமிக்கும் வினோத நதி நான்..
Friday, June 24, 2011
அழகிய தாக்குதல்காரி
உன் கண்களால் மிரட்டி உயிரை பறிக்கும்
அழகிய தாக்குதல்காரி நீ..
Tuesday, June 14, 2011
குறும்பு
பேசாமலிரு என்று சொல்லி
கையை தட்டி விட்டாலும் உனக்கு தெரியாதா?
என் கைகள் செய்யும் குறும்பை விட
உன் கண்கள் செய்யும் குறும்பு அதிகமென்று..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
என்னைப்பற்றி
கோவி
தொடர்பிற்கு: +919894808794 govivp@yahoo.com
View my complete profile
இதுவரை
►
2015
(5)
►
November
(1)
►
April
(4)
►
2014
(4)
►
December
(4)
►
2013
(20)
►
September
(1)
►
June
(2)
►
May
(5)
►
March
(1)
►
February
(2)
►
January
(9)
►
2012
(31)
►
August
(4)
►
July
(5)
►
June
(11)
►
May
(7)
►
January
(4)
▼
2011
(102)
▼
December
(16)
காற்று
காதல்
முத்தப்பூச்சி
பூக்களுக்கு அழகு குறிப்பு
மிளகாய் கவிதை
தித்திப்பு.
வெட்கம்
கண்ணாடி.
நியாயமா?
என்னாச்சு?
வெட்கம்
காதல்
வண்ணம்
காதல்
ஏன்?
விழிகள்
►
November
(17)
ஏன்?
பெருமூச்சு
சுகம்
அவசியமற்றுப்போனது
நீ
ஏதாவது?
கோலங்கள்
ஈரம்
என்னவென்று சொல்வது?
நீ...
சாரல்
பார்வை.
மழை
துளி
உனக்காய் நான்
வெகுளி
கட்டிகொள்
►
October
(2)
நீ
காதலாகிப்போனோம்
►
September
(2)
விழிப்பு
மொழி
►
August
(5)
சுனாமி
ஏய் பார்த்து..
ஆசை
மனசு
முத்தம்
►
July
(6)
பறவை
பைத்தியம்
ஓ..
தாகம்
தோல்வி
நதி
►
June
(9)
அழகிய தாக்குதல்காரி
குறும்பு
►
May
(18)
►
April
(5)
►
March
(7)
►
February
(11)
►
January
(4)
►
2010
(54)
►
December
(3)
►
November
(4)
►
October
(15)
►
September
(26)
►
August
(6)
அதிகம் வாசிக்கப்பட்டவை
புரிந்தது
நீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..
ம்ம்ம்....
நீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..
வெட்கம்
வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய்? உனக்கு வலிக்காதா? வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...
ஒரே ஒரு முறை
எப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...
நியாயமா?
பூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...
ஏதாவது?
உன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..
நீ நான்
என்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...
பூக்கள்
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
பிசாசு
என் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..
பிரிவு
ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது "டேய்... போகனுமா?" என்று நீ...
இணைப்பு நிரலிகள்
தமிழ் நண்பர்கள்
!♥♥ கோவி♥♥!
© 2013.